பாகிஸ்தான் பனிப்பொழிவில் 35 பேர் பலி

March 6, 2024

பாகிஸ்தானில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 35 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் எதிர்பாராத வகையில் மிக அதிகமான பனிப்பொழிவும் கனமழையும் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வருகிறது. இதில் 22 சிறுவர்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சரிவில் வீடுகள் புதையுன்றதால் இறந்தனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுவாக மார்ச் மாதத்தில் பருவநிலை மிதமாக இருக்கும். இருப்பினும் காஸ்பியன் கடலில் உருவாகி […]

பாகிஸ்தானில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 35 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் எதிர்பாராத வகையில் மிக அதிகமான பனிப்பொழிவும் கனமழையும் கடந்த ஐந்து நாட்களாக பெய்து வருகிறது. இதில் 22 சிறுவர்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நிலச்சரிவில் வீடுகள் புதையுன்றதால் இறந்தனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பொதுவாக மார்ச் மாதத்தில் பருவநிலை மிதமாக இருக்கும். இருப்பினும் காஸ்பியன் கடலில் உருவாகி கிழக்கு நோக்கி நகரும் மேற்கத்திய பருவநிலை கோளாறு காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu