ஆன்லைன் நிதி மோசடிகளில் 39 சதவீத இந்திய குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தனியார் நிறுவன ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 331 மாவட்டங்களில் ஏறக்குறைய 32,000 பேரிடம் லோக்கல்சர்க்கிள்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஆன்லைன் நிதி மோசடி குறித்த ஆய்வு நடத்தியது. அதில் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் நிதி மோசடிகளில் ஏறக்குறைய 39 சதவீத குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 24 சதவீதத்தினர் தங்களது பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். இவர்களில் 23 சதவீதத்தினர் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 சதவீதத்தினர் வாங்குவது, விற்பது மற்றும் வகைப்படுத்தப்பட்ட தளங்களின் பயனர்களாக உள்ளனர். 10 சதவீதத்தினர் ஏடிஎம் கார்டு மோசடி, அடுத்த 10 சதவீதத்தினர் வங்கி கணக்கு மோசடி, தவிர 16 சதவீதத்தினர் இதர மோசடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 66% ஆண்கள் மற்றும் 34% பெண்கள் என்று தெரிய வந்துள்ளது.