முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவில் 400 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடபட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 400 கோடியில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், தொழில் திறன், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையை மேம்படுத்த பல புரிந்துணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவின் மின்சார மற்றும் கனரக தொழிற்சாலைகளைச் சந்தித்து, 500 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.