ஈரானில் 4.9 அளவில் நிலநடுக்கம் - 4 பேர் பலி

June 19, 2024

ஈரானில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் பலியாகினர். 120 பேர் படுகாயம் அடைந்தனர். ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள காஷ்மர் நகரத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. நேற்று மதியம் 1.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியபடி […]

ஈரானில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் பலியாகினர். 120 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள காஷ்மர் நகரத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. நேற்று மதியம் 1.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியபடி வெளியே ஓடினர். சில இடங்களில் கட்டிடங்கள் விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நான்கு பேர் பலியாகி உள்ளனர். 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu