சீனா, பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிக்க வடக்கு எல்லை விமானப்படை தளத்தில் புதிதாக ஹெரான் மார்க் -2 டிரோன்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாட்டின் வடக்கு எல்லை விமானப்படை தளத்தில் நான்கு புதிய ஹெரான் மார்க் -2 டிரோன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சீன பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிப்பதற்காக வடக்கு எல்லா விமானப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வெகு தொலைவில் பறந்தபடி எதிரிகளின் இலக்குகளை கண்டுபிடித்து தகவல் தெரிவிக்கும் வகையிலும் இருக்கும். மேலும் இதை வைத்து போர் விமானங்கள் நெடுதூரம் ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் இலக்கை எளிதாக தாக்கும் திறன் கொண்டது. ஒரே இடத்தில் இருந்து நாடு முழுவதையும் இதில் கண்காணிக்க முடியும். இதன் மூலம் 24 மணி நேரமும் உளவுப் பணி,கண்காணிப்பு பணி என அனைத்தையும் கண்காணிக்க முடியும் என டிரோன் படை பிரிவு தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.