மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு

March 25, 2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை அரசு அளித்து வருகிறது. சமீபத்திய நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இதை மத்திய அரசு 4 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023 ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு இந்த […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை அரசு அளித்து வருகிறது. சமீபத்திய நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இதை மத்திய அரசு 4 சதவீதம் உயர்த்தி உள்ளது.

அதன்படி அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023 ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு இந்த தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu