மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட சூப்பர்பக்ஸ் நுண்ணுயிரிகள் உலகளாவிய அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. வரும் ஆண்டுகளில் சூப்பர்பக்ஸ் நோய்த்தொற்றுகளால் ஏற்படும் இறப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஆய்வின்படி, 2050 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் சூப்பர்பக்ஸ் நோய் தொற்று காரணமாக இறக்க நேரிடும். இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளில் மொத்தம் 39 மில்லியன் பேர் இறக்க நேரிடும்.
இந்த நிலைமையை மாற்ற, கடுமையான தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவதும், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எளிதாக கிடைக்கச் செய்வதும் அவசியமாகும். இதற்காக, அரசாங்கங்கள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். சூப்பர்பக்ஸ் பரவலைத் தடுக்கவும், புதிய நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளை கண்டுபிடிக்கவும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.