நாடு முழுவதும் இதுவரை 4650 கோடி ரூபாய் பறிமுதல் - தேர்தல் கமிஷன் தெரிவிப்பு

April 16, 2024

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அன்றிலிருந்து வாக்காளர்களுக்கு நகை, பணம் இலவச பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முதல் கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூபாய் 4650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை […]

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகின்றன.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அன்றிலிருந்து வாக்காளர்களுக்கு நகை, பணம் இலவச பொருட்கள் உள்ளிட்ட பொருள்களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முதல் கட்ட தேர்தல் தொடங்குவதற்கு முன்பே ரூபாய் 4650 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள நகை மற்றும் பணம் மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இவற்றில் போதை பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் மட்டும் 2069 கோடி மதிப்புள்ளவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 75 ஆண்டு காலம் மக்களவை தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பொருட்கள் பிடிபடுவது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஹெலிகாப்டர்களில் சோதனை நடத்தி வருவது புதிதல்ல எனவும் வான்வழி மார்க்கமாக பணம், இலவச பொருட்கள் கொண்டு வருவது தடுக்க இவ்வகை சோதனைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu