நியூசிலாந்து - 477 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன

October 13, 2022

நியூசிலாந்து நாட்டின் இரு கடற்கரைப் பகுதிகளில் சுமார் 477 பைலட் திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. இது உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ப்ராஜெக்ட் ஜோனா என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் பொது மேலாளர் டேரன் குரோவர் விளக்கம் அளித்துள்ளார். அவர், "திமிங்கலங்கள், தங்களுக்குள் தங்கள் இருப்பிடத்தை பற்றி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும். அதன்படி, அறியாமலேயே கரைக்கு அருகில் வந்த திமிங்கலங்களால், அனைத்து திமிங்கலங்களும் தண்ணீரின்றி இறந்து கரை ஒதுங்கி உள்ளன. பெரும்பாலான […]

நியூசிலாந்து நாட்டின் இரு கடற்கரைப் பகுதிகளில் சுமார் 477 பைலட் திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. இது உலகெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ப்ராஜெக்ட் ஜோனா என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் பொது மேலாளர் டேரன் குரோவர் விளக்கம் அளித்துள்ளார். அவர், "திமிங்கலங்கள், தங்களுக்குள் தங்கள் இருப்பிடத்தை பற்றி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும். அதன்படி, அறியாமலேயே கரைக்கு அருகில் வந்த திமிங்கலங்களால், அனைத்து திமிங்கலங்களும் தண்ணீரின்றி இறந்து கரை ஒதுங்கி உள்ளன. பெரும்பாலான திமிங்கலங்கள் தானாகவே இயற்கை மரணம் எய்தி உள்ளன. மற்றவற்றை மீண்டும் கடலுக்குள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவை கருணைக் கொலை செய்யப்படும்” என்று கூறினார்.

நியூசிலாந்தில் இருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாத்தம் தீவுகள் என்ற சிறிய தீவில், பெரும்பாலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உள்ளன. இந்த தீவில் 600 மனிதர்கள் மட்டுமே வசிக்கின்றனர். இங்குள்ள துப்புவாங்கி கடற்கரையில், 232 திமிங்கலங்கள் வெள்ளிக்கிழமை அன்று கரை ஒதுங்கின. அதன் பின்னர், வைகர் கடற்கரைப் பகுதியில் 245 திமிங்கலங்கள் திங்கட்கிழமை கரை ஒதுங்கி உள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் 200 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இது போன்ற இயற்கை நிகழ்வுகள் ஏற்படுவது வேதனை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பகுதியில், கோடை காலத்தில், இதுபோன்று கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வாடிக்கையாகும். இதற்கான விஞ்ஞான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இவ்வாறு கரை ஒதுங்கும் திமிங்கலங்கள் குறித்து ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவற்றை மீண்டும் கடலுக்குள் செலுத்த முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. சாத்தம் பகுதிகளில் சுறா மீன்களால் மனிதர்களுக்கும் திமிங்கலங்களுக்கும் அதிக ஆபத்து உள்ளது. எனவே, திமிங்கலங்களை கருணைக் கொலை செய்வதே சிறந்த வழி என்று டேவ் லுண்ட்குயிஸ்ட் என்ற கடல் சார் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, திமிங்கல ஆர்வலர் குரோவர் கூறியதாவது: “இறந்த திமிங்கலங்கள் இந்த தனிமையான தீவுப் பகுதியில் தானாகவே அழுகிவிடும். அவற்றை புதைக்கவோ, மீண்டும் கடலுக்குள் செலுத்தவோ இயலாது. இயற்கையை மிஞ்சிய மருந்தில்லை. அது தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். அந்த வகையில், இறந்த திமிங்கலங்களின் உடலில் உள்ள ஆற்றல்கள் மீண்டும் இயற்கைக்கே திரும்பிவிடும்” என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu