தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் 483 இடங்கள் காலி

September 23, 2023

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடத்திற்கு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் மாநில அரசின் எம் பி பி எஸ் படிப்பிற்கான அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. இவை தவிர வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்களில் சேராமல் இருக்கும் 34 இடங்களுக்கு இறுதி சுற்று கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இன்னும் கலந்தாய்வுகள் அனைத்தும் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் 1640 எம்பிபிஎஸ் இடங்கள் […]

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடத்திற்கு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் மாநில அரசின் எம் பி பி எஸ் படிப்பிற்கான அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. இவை தவிர வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்களில் சேராமல் இருக்கும் 34 இடங்களுக்கு இறுதி சுற்று கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இன்னும் கலந்தாய்வுகள் அனைத்தும் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் 1640 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 772 ஆகும். இதில் தமிழகத்தில் மட்டும் உள்ள கல்லூரிகளில் 483 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டும் 59 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஒரு டஜன் இடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது காலியாக உள்ள இடங்களை நிரப்பாவிட்டால் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. இவை தவிர கட் ஆப் மதிப்பெண்களை 30 வரை குறைக்கவும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu