அமேசான் வனப்பகுதியில் விமான விபத்து - 5 பேர் பலி

August 16, 2024

அமேசான் வனப்பகுதியில் விமானம் வெடித்து சிதறியதில் 5 பேர் பலியாகினர். பிரேசிலில் உள்ள மடோ கிராஸ்ரோ மாகாணத்தில் உள்ள அமேசானியன் நகரில் இருந்து ராண்டநோபஸ் நகருக்கு நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. இதில் ஐந்து பேர் பயணித்தனர். இந்த விமானம் அமேசான் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த சிறிது நேரத்தில் விமானம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் விமானத்தில் […]

அமேசான் வனப்பகுதியில் விமானம் வெடித்து சிதறியதில் 5 பேர் பலியாகினர்.

பிரேசிலில் உள்ள மடோ கிராஸ்ரோ மாகாணத்தில் உள்ள அமேசானியன் நகரில் இருந்து ராண்டநோபஸ் நகருக்கு நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. இதில் ஐந்து பேர் பயணித்தனர். இந்த விமானம் அமேசான் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கீழே விழுந்த சிறிது நேரத்தில் விமானம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் விமானத்தில் பயணித்த ஐந்து பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் அட்மின் ஸ்பிரிங்ஸ் என்ற தொழிலதிபரும் ஒருவர் ஆவார். உயிரிழந்தவர்களின் உடல்களை அதிகாரிகள் கைப்பற்றி இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu