உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க இலவச டேட்டா தருவதாக சமூகவலைதளங்களில் வரும் பதிவு போலியானது என சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில் சமீப காலமாக உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவி கொண்டிருக்கிறது. அதனைக் குறிப்பிட்ட நபர்களுக்கு பகிர்ந்தால் உங்களுக்கு 50 ஜிபி டேட்டா இலவசம் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதால் பலரும் இதனை நம்பி அந்தச் செய்தியை வெகுவாக பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.