கோயம்பேடு, அண்ணாநகர் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
சென்னையில் ஸ்பா என்ற பெயரில் சட்டவிரோத செயல்கள் நடந்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்
தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்து உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்