காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உதவிய 6 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
இதுகுறித்து டிஜிபி தில்பக் நேற்று கூறுகையில், ராணுவ வாகனத்தின் மீது 3 முதல் 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் தீவிரவாதிகளுக்கு 3 மாதங்களாக உணவு, தங்குமிடம் கொடுத்து வழிகாட்டியுள்ளனர். ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் வந்துள்ளன. அதை உள்ளூர் நபர்கள் எடுத்து, தீவிரவாதிகளிடம் கொடுத்துள்ளனர்.
பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த நிசார் என்பவர் கடந்த 1990-ம் ஆண்டு முதல், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் கமாண்டர் உத்தரவுப்படி செயல்படுகிறார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். ராணுவ வாகனத்துக்கு மிக அருகில் வந்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றார்.