அமெரிக்கா : மிசிசிபி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

February 18, 2023

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், மிசிசிபி மாகாணத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசிசிபி மாகாணத்தில் உள்ள டேட் கவுண்டியில் உள்ள அர்கபுட்லா அணை சாலையில், இரவு சமயத்தில் தொடர்ச்சியாக துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து […]

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், மிசிசிபி மாகாணத்தில் நேற்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசிபி மாகாணத்தில் உள்ள டேட் கவுண்டியில் உள்ள அர்கபுட்லா அணை சாலையில், இரவு சமயத்தில் தொடர்ச்சியாக துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்துள்ளனர். இது குறித்து மிசிசிபி மாகாண கவர்னர் டேட் ரீவ்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தனி ஆளாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளோம். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு என் பிரார்த்தனைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu