இஸ்ரேல் தாக்குதலில் ஐ.நா பணியாளர்கள் 6 பேர் பலி

September 13, 2024

காசாவின் மத்திய பகுதியில் உள்ள நுசிராட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஐ.நா பணியாளர்கள் 6 பேர் பலியாகினர். காசாவின் மத்திய பகுதியில் உள்ள நுசிராட்டில் அமைந்துள்ள தங்குமிடத்தில் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 6 ஐ.நா. ஊழியர்கள், 19 பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை ஐ.நா. தலைவர் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுமார் 12,000 பேர் தங்குமிடமாக […]

காசாவின் மத்திய பகுதியில் உள்ள நுசிராட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் ஐ.நா பணியாளர்கள் 6 பேர் பலியாகினர்.

காசாவின் மத்திய பகுதியில் உள்ள நுசிராட்டில் அமைந்துள்ள தங்குமிடத்தில் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 6 ஐ.நா. ஊழியர்கள், 19 பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை ஐ.நா. தலைவர் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சுமார் 12,000 பேர் தங்குமிடமாக மாற்றப்பட்ட பள்ளிக்கூடத்தில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 6 பேர் நமது ஊழியர்கள் ஆவர். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் இந்த அசாதாரண மீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu