அருணாச்சல பிரதேசத்தில் மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் சுமார் 600 பள்ளிகள் மூடப்பட உள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்து அம்மாநில கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா சட்டசபையில் கூறியுள்ளார். அப்போது அருணாச்சலில் செயல்படாத அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத 600 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சில பள்ளிகள் மட்டும் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோன்று செயல்பாட்டில் இல்லாத பல பள்ளிகளை மூடவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.