இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு - மேலும் 609 பேருக்கு கொரோனா உறுதி

January 12, 2024

இந்தியாவில் புதிய வகை கொரோனாவான ஜே.என் 1 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஜே.என் 1 வகை தொற்று பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த ஜே.என் 1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களாக இருந்த நிலையில் தற்போது மூன்று இலக்கங்களாக மாறி உள்ளது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா […]

இந்தியாவில் புதிய வகை கொரோனாவான ஜே.என் 1 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது.
பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஜே.என் 1 வகை தொற்று பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த ஜே.என் 1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களாக இருந்த நிலையில் தற்போது மூன்று இலக்கங்களாக மாறி உள்ளது.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 609 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3368 ஆக மாறியுள்ளது. மேலும் புதிய வகை கொரோனா தொற்றால் கேரளாவில் இரண்டு பேரும், கர்நாடகாவில் ஒருவரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu