பருவநிலை மாற்றத்தால் 65% பூச்சிகள் அழியும் - ஆய்வு தகவல்

November 18, 2022

அடுத்த நூற்றாண்டுக்குள், பூமியில் உள்ள 65% பூச்சி இனங்கள் காலநிலை மாற்றத்தால் அழிய நேரிடும் என்று நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. புவி வெப்பமயமாதலால் வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. வெப்ப அழுத்தத்தின் காரணமாக காலநிலை மத்தியஸ்த (Climate-Mediate) மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த மாற்றத்தால், விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளில், ஆய்வு செய்யப்பட்ட 38 வகை பூச்சி […]

அடுத்த நூற்றாண்டுக்குள், பூமியில் உள்ள 65% பூச்சி இனங்கள் காலநிலை மாற்றத்தால் அழிய நேரிடும் என்று நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற இதழில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

புவி வெப்பமயமாதலால் வெப்ப அழுத்தம் ஏற்படுகிறது. வெப்ப அழுத்தத்தின் காரணமாக காலநிலை மத்தியஸ்த (Climate-Mediate) மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த மாற்றத்தால், விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் உள்ளதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 50 முதல் 100 ஆண்டுகளில், ஆய்வு செய்யப்பட்ட 38 வகை பூச்சி இனங்களில், 65% பூச்சி இனங்கள் அழியும் அபாயம் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, சுற்றுச்சூழலில் ஏற்படும் ஒழுங்கற்ற மாறுதல்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் அற்ற பட்டாம்பூச்சி, தட்டான் பூச்சி போன்ற குளிர்ந்த ரத்தம் கொண்ட பூச்சி இனங்கள் அழிய நேரிடும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu