மெட்ரோ ரெயிலில் ஏப்ரல் மாதம் 66.85 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் மூலம் கடந்த ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகளும், பிப்ரவரி மாதம் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த மாதம் 28-ந்தேதி 2 லட்சத்து 68 ஆயிரத்து 680 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.