66,130 ஊரக தூய்மைக் காவலர்களுக்கு மாத மதிப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ;
*ரூ.70 கோடி மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.
*முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் 2,043 புதிய சத்துணவுக் கூடங்கள் ரூ.154 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
*ஊரகப் பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
*66,130 ஊரகப் பகுதி தூய்மைக் காவலர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3,600-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
*விளிம்பு நிலை மக்களின் குடியிருப்புகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.