சென்னை விமான நிலையத்தில் ஏழு அடுக்கு பாதுகாப்பு

August 14, 2023

நாளை நாடு முழுவதும் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. சுதந்திர தின விழா அன்று மக்கள் அதிகமாக கூடும் விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இந்த மாதம் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை நடைமுறையில் இருந்து […]

நாளை நாடு முழுவதும் 76 வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

சுதந்திர தின விழா அன்று மக்கள் அதிகமாக கூடும் விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இந்த மாதம் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னை விமானத்தில் 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு 16-ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்காக பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் வீரர்களின் விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பணி நேரம் 12 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் கூடுதலாக அழைத்து வரவழைக்கப்பட்டு இருக்கின்றன. விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதி அளிக்கின்றனர். முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாஸ்களிலும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பயணிகள் திரவ பொருள்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விமானங்களில் சரக்கு பார்சல் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதித்து அளிக்கப்படுகிறது. அதேபோன்று விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு ஏற்கனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu