சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கிச் சண்டையில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர்- நரைன்பூர் மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் ஏழு மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்தில் இருந்து 7 துப்பாக்கிகள் உட்பட்ட ஆயுதங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு மாலை வரை நீடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் இதுவரை 112 மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சண்டையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இது 2023 ஆம் ஆண்டை விட மிக அதிகமான எண்ணிக்கையாகும்