இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதனை மத்திய தரை கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா, பங்சல் அருகே நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அடியில் 525 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. இதற்கு இடையில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.