சென்னையில் 8 அணிகள் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் லீக் போட்டி

சென்னையில் ஐந்தாவது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டி நடைபெற உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் டேபிள் டென்னிஸ் லீக் என்று அழைக்கப்படும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியவரால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 7 வரை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு […]

சென்னையில் ஐந்தாவது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் போட்டி நடைபெற உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் டேபிள் டென்னிஸ் லீக் என்று அழைக்கப்படும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியவரால் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 7 வரை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஐந்தாவது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இந்த சீசனில் புதிதாக இரண்டு அணிகள் பங்கேற்க உள்ளன. அதன்படி முதல் முறையாக 8 அணிகளுடன் டேபிள் டென்னிஸ் லீக் நடத்தப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு அணியும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஆறு வீரர்களை கொண்டிருக்கும். எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெறுகிறது. ஒவ்வொரு அணியும் லீக் ஆட்டத்தில் ஐந்து ஆட்டங்களில் விளையாடும். பின்னர் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். எதிர் பிரிவில் உள்ள இரண்டு அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இந்த 2 அணிகளும் குலுக்கல் முறையில் தீர்மானிக்கப்படும்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu