பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் லாபம் 81000 கோடி

May 14, 2024

கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் லாபம் 81000 கோடி அளவில் பதிவாகியுள்ளது. இதுவரை பதிவான வருடாந்திர லாபத்தில் அதிகபட்சமாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களின் கூட்டு வருடாந்திர லாபம் 81000 கோடி ஆக சொல்லப்பட்டுள்ளது. எண்ணெய் நெருக்கடிக்கு முன்பு இந்த நிறுவனங்களின் கூட்டு லாபம் 39356 கோடி அளவில் பதிவான நிலையில், […]

கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் லாபம் 81000 கோடி அளவில் பதிவாகியுள்ளது. இதுவரை பதிவான வருடாந்திர லாபத்தில் அதிகபட்சமாகும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களின் கூட்டு வருடாந்திர லாபம் 81000 கோடி ஆக சொல்லப்பட்டுள்ளது. எண்ணெய் நெருக்கடிக்கு முன்பு இந்த நிறுவனங்களின் கூட்டு லாபம் 39356 கோடி அளவில் பதிவான நிலையில், கடந்த நிதி ஆண்டில் அதிகபட்சமான லாபம் பதிவாகியுள்ளது கவனிக்கத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை குறைக்காத காரணத்தால் அதிகளவில் லாபம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தனித்தனியாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 39618.84 கோடி, பாரத் பெட்ரோலியம் 26673.5 கோடி, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 14693.83 கோடி அளவில் லாபம் ஈட்டி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu