ரஷ்ய இசை அரங்கு தாக்குதல் - தஜகிஸ்தானில் 9 பேர் கைது

March 30, 2024

மாஸ்கோவில் இசை அரங்கு ஒன்றில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தஜகிஸ்தானில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து ரஷ்ய அரசு தரப்பில் கூறப்படுவதாவது, மாஸ்கோ இசையரங்கில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 144 பலியாகினர். இது தொடர்பாக தஜிகிஸ்தானில் ஒன்பது பேரை அந்நாட்டு சிறப்பு படையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையில் ரஷ்ய பாதுகாப்பு படையினரும் பங்கேற்றனர். மாஸ்கோவில் கிராக்கஸ் சிட்டி ஹால் இசையரங்கத்திற்கு […]

மாஸ்கோவில் இசை அரங்கு ஒன்றில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தஜகிஸ்தானில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து ரஷ்ய அரசு தரப்பில் கூறப்படுவதாவது, மாஸ்கோ இசையரங்கில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 144 பலியாகினர். இது தொடர்பாக தஜிகிஸ்தானில் ஒன்பது பேரை அந்நாட்டு சிறப்பு படையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையில் ரஷ்ய பாதுகாப்பு படையினரும் பங்கேற்றனர். மாஸ்கோவில் கிராக்கஸ் சிட்டி ஹால் இசையரங்கத்திற்கு கடந்த வாரம் 4 பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் வந்து சரமாரியாக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் குண்டுகளை வீசி அங்கு அரங்கத்திற்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 144 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 12 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களில் தாக்குதல் நடத்திய நான்கு பயங்கரவாதிகளும் அடங்குவர். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக மேலும் 9 பேர் தஜிகஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ .எஸ் அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐ எஸ் கே பொறுப்பேற்றுள்ளது. எனினும் ரஷ்யா இந்த தாக்குதலில் உக்கிரேனுக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu