பாகிஸ்தான் - தற்கொலைப்படை தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

September 1, 2023

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், நேற்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 9 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த நபர், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. ‘இது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்’ என பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் […]

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், நேற்று தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், 9 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20 பேர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த நபர், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. ‘இது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்’ என பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வர் உல் ஹக் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், அரசியல் குழப்ப சூழல் காரணமாக சிக்கலில் உள்ளது. அதனுடன் சேர்ந்து, இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறுவதால், அந்நாட்டுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu