90 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

நாடு முழுவதும் 90 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, செவ்வாய்க்கிழமை மாலை முதல் 100க்கும் மேற்பட்ட விமான பணியாளர்கள் உடல்நிலையை காரணம் காட்டி பணி நேரத்திற்கு வரவில்லை என்பதால் நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சில நாட்களுக்கான விமான சேவை திட்டமும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வகையில் விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து […]

நாடு முழுவதும் 90 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, செவ்வாய்க்கிழமை மாலை முதல் 100க்கும் மேற்பட்ட விமான பணியாளர்கள் உடல்நிலையை காரணம் காட்டி பணி நேரத்திற்கு வரவில்லை என்பதால் நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சில நாட்களுக்கான விமான சேவை திட்டமும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த வகையில் விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெவ்வேறு விமான நிலையங்களில் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு டாட்டா குழுமம் நிர்வகித்துவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்துடன் பணியாளர்களின் பிரச்சனை தான் காரணம் என பிடிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விரைவில் இதற்கான தீர்வு காணுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனை அடுத்து கொச்சி, கோழிக்கோடு, டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் பயண நேரம் குறித்து பயணிகள் ஏர் இந்தியாவை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu