பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் சென்று ஓட்டு போட ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 19 ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் 100% வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் நாளை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமான சேவைகள் உள்ளிட்ட சிறப்பு பேருந்துகளில் 95% முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் வாக்குபதிவு நடைபெறும் 19ஆம் 10,214 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறு செல்வதாக இருந்தால் போதுமான பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.