மயிலாப்பூரில் பிரம்மாண்ட கலாச்சார மையம்

சென்னை மயிலாப்பூரில் இந்து அறநிலையத்திற்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 28.716 கோடி செலவு பிரமாண்ட கலாச்சார மையம் கட்டப்பட உள்ளது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 22.80 கிரவுண்ட் இடத்தில் இந்த மையம் கட்டப்பட உள்ளது. இது 4757 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. இதில் தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான காட்சிகள் மற்றும் உணவு அறைகள் தரைத்தளத்தில் உருவாக்கப்பட இருக்கின்றன. மேலும் முதல் தளத்தில் மூன்று கலாச்சார பயிற்சி கூடங்கள், 120 பேர் அமரும் வகையில் […]

சென்னை மயிலாப்பூரில் இந்து அறநிலையத்திற்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 28.716 கோடி செலவு பிரமாண்ட கலாச்சார மையம் கட்டப்பட உள்ளது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 22.80 கிரவுண்ட் இடத்தில் இந்த மையம் கட்டப்பட உள்ளது. இது 4757 சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது. இதில் தமிழர் பண்பாடு கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான காட்சிகள் மற்றும் உணவு அறைகள் தரைத்தளத்தில் உருவாக்கப்பட இருக்கின்றன. மேலும் முதல் தளத்தில் மூன்று கலாச்சார பயிற்சி கூடங்கள், 120 பேர் அமரும் வகையில் செயல் திறன் கூடம் இடம் பெற உள்ளது. மூன்று பல்நோக்கு கூடங்கள் 233 பேர் அமரும் வகையிலான உணவு அறைகள் இரண்டாவது தளத்தில் இடம்பெறுகிறது. 231 பேர் அமரும் வகையில் பல்நோக்கு கூடம் மற்றும் 90 பேர் சாப்பிடும் வகையில் உணவு அறை உள்ளிட்டவை மூன்றாவது தளத்தில் இடம்பெறுகிறது. இது தவிர ஆன்மீக நூலகம், மீட்கப்பட்ட சாமி சிலைகள், அரங்கம் போன்றவை இவற்றில் இடம்பெறுகின்றன. இதற்கான டெண்டர் விடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டுள்ளன. நியாயமான வாடகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu