ஜேபி மோர்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா உட்பட முன்னணி வங்கிகளுக்கு ரூ.4.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான, சிலிகான் வேலி பேங்க் (எஸ்விபி) பங்கு மதிப்பு கடந்த வியாழக்கிழமை 60% வீழ்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து மற்ற வங்கிகளின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஜேபி மோர்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா உட்பட முன்னணி வங்கிகளுக்கு ரூ.4.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட அளவைவிடவும் வைப்புத் தொகை குறைந்த நிலையில், அதை ஈடு செய்ய வங்கியின் கடன்பத்திரங்களை 1.8 பில்லியன் டாலர் (ரூ.14,760 கோடி) நஷ்டத்தில் எஸ்விபி விற்றது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று அதன் பங்கு மதிப்பு 60% சரிந்தது. இதையடுத்து ஜேபி மோர்கன், பேங்க் ஆஃப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ,சிட்டி குரூப் உள்ளிட்ட பெரிய வங்கிகளின் பங்கு மதிப்பு 52 பில்லியன் டாலர் (ரூ.4.25 லட்சம் கோடி) அளவில் சரிந்தது.