சீனாவின் எதிர்ப்புக்கு மாறாக, இந்திய மலைச்சிகரம் "சாங்யாங் கியாட்சோ" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு, இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், இது இரு நாடுகளுக்கிடையில் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில், தேசிய மலையேற்ற பயிற்சி நிறுவனத்தினர் 20,942 அடி உயர மலைச்சிகரத்தை அடைந்து, அந்த மலைக்கு "சாங்யாங் கியாட்சோ" என ஆறாவது தலாய் லாமா பெயரை சூட்டினர். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது, அந்த மலை சீனாவின் பகுதியாகும் எனவும், இந்தியா பெயர் சூட்டுவது சட்டவிரோதம் எனவும் கூறியுள்ளது.