40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவது மற்றும் புதுப்பிப்பதற்கான புதிய வழிமுறைகளை போக்குவரத்து துறை வெளியேற்றுள்ளது.
போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் 40 வயதிற்கு மேற்பட்டோர் மருத்துவ சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுனர் உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் முடியும். இச்சட்டம் மத்திய மோட்டார் வாகன விதி 5ன்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்களிடம் சான்று பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் போலி மருத்துவ சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்கவே இந்த புதிய அறிவிப்பு என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவு எண் மருத்துவர்கள் சாரதி மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது