100 நாள் வேலை திட்டதின் ஒரு நாள் ஊதியம் உயர்வு

March 28, 2024

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு ஒரு நாள் கூலியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று இந்த அரசாணையை வெளியிட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி 2024- 2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு […]

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு ஒரு நாள் கூலியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று இந்த அரசாணையை வெளியிட்டுள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி 2024- 2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ரூபாய் 86 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வருட நிதியாண்டு தொடங்கியுள்ளதால் அதே தேதியில் அரசாணை அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு ஒரு நாள் ஊதியம் 319 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 27 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரிக்கும் 319 ரூபாய் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம் உயர்த்தப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக அரியானாவில் 374 ரூபாய் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 234 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu