பாகிஸ்தானில் மக்கள் போராட்டம் - போலீஸ் அதிகாரி பலி

May 13, 2024

பாகிஸ்தானில் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார். கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலை உயர்வை கண்டித்தும் உயர்த்தட்டு […]

பாகிஸ்தானில் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.

கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலை உயர்வை கண்டித்தும் உயர்த்தட்டு மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் போலீஸாரை தாக்கினர். அதில் ஒருவர் பலியானார். மேலும் இந்த சம்பவத்தில் 78 போலீஸார் உட்பட 100 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். அதனைத் தொடர்ந்து செல்போன் மற்றும் இணைய சேவைகள் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டன. அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சூழலை சமாளிப்பது தொடர்பாக அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவசர கூட்டம் நடத்துகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu