சென்னை-தூத்துக்குடி, மதுரை மற்றும் திருச்சிக்கான விமானங்கள் 2 மடங்கு உயர்ந்துள்ளன.
தீபாவளி பண்டிகை நாளை (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை செல்லும் ஏராளமானோர் விமான பயணத்தை தேர்வு செய்து உள்ளனர். இதனால் உள்நாட்டு விமான முனையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது. தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமான கட்டணங்கள் 2 மடங்கு அதிகரித்து உள்ளன. உதாரணமாக, சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.4,109 என்றால், இன்று ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உள்ளது. இதேபோல், மதுரைக்கு ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை, திருச்சிக்கு ரூ.8,211 முதல் ரூ.10,556 வரை, கோவைக்கு ரூ.7,872 முதல் ரூ.13,428 வரை, சேலத்திற்கு ரூ.8,353 முதல் ரூ.10,867 வரை உயர்ந்துள்ளது.