கஜகஸ்தானின் பைகோனூரில் இருந்து புதன்கிழமை ஏவப்பட்ட சோயுஸ் விண்கலம் மூன்று மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) அடைந்து வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸி ஒவ்ச்சினின், இவான் வாக்னர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் பெட்டிட் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் இதில் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சோயுஸ் ஏவுதல் சற்று தாமதமானது. இருப்பினும், இந்த முறை ஏவுதல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே 6 நாசா விண்வெளி வீரர்கள் மற்றும் 3 ரஷ்ய விண்வெளி வீரர்கள் தங்கியிருக்கும் நிலையில், புதிய குழுவினர் இணைந்துள்ளனர். அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் அமைப்புகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.