மும்பை தாக்குதல் குற்றவாளி அப்துல் சலாம் புட்டாவி உயிரிழந்து விட்டதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு

January 12, 2024

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் அப்துல் சலாம் புட்டாவி உயிரிழந்து விட்டதாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு, மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் குற்றவாளிகளாக உள்ளனர். குறிப்பாக, புட்டாவி என்பவர் திட்டத்தின் மூளையாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய நபரான ஹபீஸ் சையதுவின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். அவர், பாகிஸ்தானில் கடந்த […]

மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் அப்துல் சலாம் புட்டாவி உயிரிழந்து விட்டதாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு, மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் குற்றவாளிகளாக உள்ளனர். குறிப்பாக, புட்டாவி என்பவர் திட்டத்தின் மூளையாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய நபரான ஹபீஸ் சையதுவின் நெருங்கிய கூட்டாளியும் ஆவார். அவர், பாகிஸ்தானில் கடந்த மே 29ஆம் தேதி உயிரிழந்ததாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறையில் சிறைவாசம் அனுபவித்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் வேறு பல தீவிரவாத தாக்குதல்களிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu