சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ராயப்பேட்டை பகுதியில், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட "ஹிஸ்புத் தஹீர்" அமைப்புக்கு யூடியூப் மூலம் ஆள்களை சேர்க்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6 பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது, இந்த வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றது. இந்தச் சோதனையின் போது, "ஹிஸ்புத் தஹீர்" அமைப்புக்கு யூடியூப் வழியாக ஆள்களை சேர்க்கப்பட்ட இடங்களில், என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.