பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மாரடைப்பால் காலமானார்.
பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா, பெங்களூருவில் ஜஸ்வந்த்பூரில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் 85வது வயதில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. இவர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, 1960-ல் 'கைதி கண்ணாயிரம்' படத்தில் அறிமுகமானார். 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் மிகுந்த புகழ் பெற்றவர். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.