அதானி எண்டர்பிரைசஸ் எட்ஜ்கனெக்ஸ் கூட்டணியில் 213 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டல்

June 23, 2023

அதானி குழுமம், தனியார் டேட்டா சென்டர் நிறுவனமான எட்ஜ்கனெக்ஸ் உடன் கூட்டாக இணைந்து, இந்தியாவில் பல்வேறு டேட்டா சென்டர்களை அமைக்க திட்டமிட்டு இருந்தது. அதன்படி, தற்போது, இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் 213 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிதி, டேட்டா சென்டர்களின் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் நொய்டா நகரங்களில் இந்த டேட்டா சென்டர்கள் அமைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இவற்றின் திறன் 67 மெகாவாட் அளவில் இருக்கும் […]

அதானி குழுமம், தனியார் டேட்டா சென்டர் நிறுவனமான எட்ஜ்கனெக்ஸ் உடன் கூட்டாக இணைந்து, இந்தியாவில் பல்வேறு டேட்டா சென்டர்களை அமைக்க திட்டமிட்டு இருந்தது. அதன்படி, தற்போது, இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் 213 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்த நிதி, டேட்டா சென்டர்களின் கட்டுமான பணிகளுக்கு செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் நொய்டா நகரங்களில் இந்த டேட்டா சென்டர்கள் அமைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இவற்றின் திறன் 67 மெகாவாட் அளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் எட்ஜ்கனெக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் 1 ஜிகாவாட் திறனில் டேட்டா சென்டர் அமைக்க திட்டமிட்டுள்ளன. இதற்கான இலக்கு 2030 ஆம் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu