இந்திய பங்குச் சந்தையில் அதானி குழும பங்குகள் தொடர் உயர்வை பதிவு செய்து வருகின்றன. குறிப்பாக, அதானி குழுமத்தின் விளம்பரதாரர்கள் தங்கள் பங்குகளை அதிகரித்ததன் விளைவாக, நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 3% வரை உயர்ந்து வர்த்தகமானது.
கெம்பாஸ் ட்ரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 2.53 கோடி பங்குகளை வாங்கி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 7 முதல் 18ஆம் தேதி வரை இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இது தவிர, அமெரிக்காவை சேர்ந்த ஜிகியூஜி பார்ட்னர்ஸ் அதானி குழுமத்தில் முதலீடுகளை அதிகரித்துள்ளது. இவற்றின் மூலம், அதானி குழுமத்தில், விளம்பரதாரர்களின் பங்குகள் 67.65% ல் இருந்து 69.87% ஆக உயர்ந்துள்ளது. எனவே, சராசரி வர்த்தக மதிப்பை விட அதானி நிறுவன பங்குகள் இன்று உச்சத்தை தொட்டுள்ளன.