அம்புஜா சிமெண்ட்ஸில் அதானி குடும்பம் 6661 கோடி முதலீடு

March 28, 2024

அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குடும்பத்தினர் 6661 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதன் விளைவாக, அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குடும்பத்துக்கு இருந்த பங்கு பங்களிப்பு 3.6% உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 66.7% பங்குகளை அதானி குழுமம் கொண்டுள்ளது. அதானி குழுமத்தின் முதலீட்டு செய்தியின் விளைவாக, அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 2% உயர்ந்து வர்த்தகமாகின்றன. அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்காக அதானி குழுமம் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் […]

அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குடும்பத்தினர் 6661 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதன் விளைவாக, அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குடும்பத்துக்கு இருந்த பங்கு பங்களிப்பு 3.6% உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 66.7% பங்குகளை அதானி குழுமம் கொண்டுள்ளது. அதானி குழுமத்தின் முதலீட்டு செய்தியின் விளைவாக, அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 2% உயர்ந்து வர்த்தகமாகின்றன.

அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்காக அதானி குழுமம் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2022 ல், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குழுமம் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கூடுதலாக முதலீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம், 2028 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 140 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி மேற்கொள்வதற்கான நிறுவனத்தின் இலக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu