கென்யா அரசு, இந்தியாவின் அதானி குழுமத்திற்கும் ஆப்பிரிக்கன் டெவலப்மென்ட் வங்கியின் பிரிவான ஆப்பிரிக்கா 50 நிறுவனத்திற்கும் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொது-தனியார் கூட்டாண்மை ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கென்யாவில் புதிய மின் கடத்தும் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் பொருளாதார ஆலோசகர் டேவிட் என்டி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த திட்டத்திற்கு கென்யா அரசு கூடுதல் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை.
இதற்கிடையில், கென்யாவின் முக்கியமான விமான நிலையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கான திட்டம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், அதானி குழுமம் 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கென்யா அரசு அதிக அளவு கடனில் மூழ்கியுள்ள நிலையில், வரி உயர்வு போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.