இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரனில் ஒருவரான கௌதம் அதானியின் நிறுவனம் அதானி குழுமம். இது தற்போது காப்பர் உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது.
அதானி குழுமம் பல்வேறு உலக நாடுகளில் பல துறைகளில் கால் பதித்து வருகிறது
மேலும் இது துறை முக கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தில் முக்கிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அவை தவிர துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் நிர்வாகம்,மின் சக்தி உற்பத்தி மற்றும் பகிர்மான சுரங்கம், இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பல உள்கட்ட அமைப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள முத்ரா நகரில் மிகப்பெரிய காப்பர் உற்பத்தி ஆலையை அதானி குழுமம் நிறுவி வருகிறது. இந்த ஆலை செயல்பாட்டிற்கு வந்ததும் அயல்நாடுகளை இந்தியா காப்பிற்காக சார்ந்து இருக்கும் நிலை குறைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.