டெலாய்ட் வெளியேறியதால் புதிய ஆடிட்டர்கள் நியமித்த அதானி போர்ட்ஸ்

August 14, 2023

கடந்த மே மாதத்தில் அதானி போர்ட்ஸ் பரிவர்த்தனைகளில் கேள்விகள் உள்ளதாக டெலாய்ட் நிறுவனம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் பொறுப்பில் இருந்து நிறுவனம் வெளியேறியது. தற்போது, அதானி போர்ட்ஸ், MSKA & Associates ஐ புதிய ஆடிட்டர் ஆக நியமனம் செய்துள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி முதல், இவர்கள் ஆடிட்டராக பொறுப்பு வகிப்பதாக தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தில் இருந்து டெலாய்ட் நிறுவனம் வெளியேறியது, அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட நிதி முறைகேடுகளை மேலும் அதிகரிப்பதாக […]

கடந்த மே மாதத்தில் அதானி போர்ட்ஸ் பரிவர்த்தனைகளில் கேள்விகள் உள்ளதாக டெலாய்ட் நிறுவனம் தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் பொறுப்பில் இருந்து நிறுவனம் வெளியேறியது. தற்போது, அதானி போர்ட்ஸ், MSKA & Associates ஐ புதிய ஆடிட்டர் ஆக நியமனம் செய்துள்ளது. ஆகஸ்ட் 12ம் தேதி முதல், இவர்கள் ஆடிட்டராக பொறுப்பு வகிப்பதாக தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தில் இருந்து டெலாய்ட் நிறுவனம் வெளியேறியது, அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்ட நிதி முறைகேடுகளை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது. அதே வேளையில், டெலாய்ட் நிறுவனத்தின் விருப்பப்படி அது வெளியேறி உள்ளதாகவும், அதன் காரணமாகவே புதிய ஆடிட்டர் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதானி போர்ட்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu