ஒடிசாவின் கோபால்பூர் துறைமுகத்தின் 95% பங்குகளை வாங்கும் அதானி போர்ட்ஸ்

March 26, 2024

ஒடிசாவில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தின் 95% பங்குகளை அதானி போர்ட்ஸ் வாங்க உள்ளது. இதன் மொத்த மதிப்பு 13.49 பில்லியன் ரூபாய் ஆகும். பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்திடம் இருந்து 56% கோபால்பூர் துறைமுக பங்குகளை அதானி போர்ட்ஸ் வாங்குகிறது. மேலும், ஒரிசா ஸ்டீவ்டோர்ஸ் இடம் இருந்து 39% துறைமுக பங்குகளை வாங்குகிறது. விரைவில் இந்த பங்கு விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குகளை வாங்குவதன் மூலம் கோபால்பூர் துறைமுகம் அதானி குழுமத்தின் […]

ஒடிசாவில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தின் 95% பங்குகளை அதானி போர்ட்ஸ் வாங்க உள்ளது. இதன் மொத்த மதிப்பு 13.49 பில்லியன் ரூபாய் ஆகும்.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்திடம் இருந்து 56% கோபால்பூர் துறைமுக பங்குகளை அதானி போர்ட்ஸ் வாங்குகிறது. மேலும், ஒரிசா ஸ்டீவ்டோர்ஸ் இடம் இருந்து 39% துறைமுக பங்குகளை வாங்குகிறது. விரைவில் இந்த பங்கு விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குகளை வாங்குவதன் மூலம் கோபால்பூர் துறைமுகம் அதானி குழுமத்தின் பான் இந்தியா துறைமுக இணைப்பில் ஒன்றாக மாறும் என்று அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கரண் அதானி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி கோபால்பூர் துறைமுகத்தில் ஆண்டுக்கு 20 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu