அதானி வில்மர் லிமிடெட் நிறுவனம், உணவுப் பொருட்கள் துறையில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டில் ₹500 முதல் ₹600 கோடி வரை முதலீடு செய்ய உள்ளது. சூரிய மின்சார உற்பத்தி திறனை 8 மெகா வாட்டிலிருந்து 15 மெகாவாட் ஆக அதிகரிக்கவும், எண்ணெய் விதைகள் பதனிடும் திறனை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில், அதானி வில்மர் நிறுவனத்தின் சமையல் எண்ணெய் பிரிவின் வருவாய் 8% உயர்ந்து ₹10,649 கோடியாகவும், உணவு மற்றும் FMCG பிரிவின் வருவாய் 40% உயர்ந்து ₹1,533 கோடியாகவும் உள்ளது. தற்போது, ₹3,400 கோடி மதிப்பிலான பல்வேறு வர்த்தக விரிவாக்க திட்டங்களை அதானி வில்மர் செயல்படுத்தி வருகிறது. இதற்கு மேலதிகமாக இந்த ₹600 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.