குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தில் கூடுதலாக 5000 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயமரியாதை உடன் வாழ்வதற்கும் உரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இதற்கு தகுதியான பயனாளிகளை கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிமை தொகை மாதா மாதம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகள் ஆக 5041 பேர் கூடுதலாக இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.